Saturday, December 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதந்திர தின விழாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏற்றுங்கள் - இரா.சாணக்கியன்

சுதந்திர தின விழாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏற்றுங்கள் – இரா.சாணக்கியன்

இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஏற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

திட்டமிட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பில் மட்டக்களப்பில் கறுப்புக்கொடி ஏற்றி தமது அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டை சீரழித்த அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .

எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்த போதிலும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும், போராட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles