Wednesday, August 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை - சவுதி அரேபியா இடையே புதிய வரி ஒப்பந்தம்

இலங்கை – சவுதி அரேபியா இடையே புதிய வரி ஒப்பந்தம்

வருமானத்திற்கு இரட்டை வரி விதிப்பதை தடுக்கவும், அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கவும் இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75 (3) பிரிவின் பிரகாரம் இந்த உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உறுதி செய்துள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சு உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இணங்கியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இராஜதந்திர மட்டத்தில் மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 75 (1) இன் விதிகளின்படி மேற்படி உடன்படிக்கையின் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் முன்மொழிவை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles