மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட அதிகூடிய வரியை அநேகமான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நேற்று செலுத்த நேரிட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டத் திருத்தத்திற்கு அமைய, ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு பெறும் அனைவரும் 6 வீதத்தில் இருந்து 36 வீதம் வரை வரியை செலுத்த வேண்டியுள்ளது.
மக்கள் பல அழுத்தங்களை சந்தித்துள்ள நிலையிலேயே ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு பெறுவோரிடம் அரசாங்கம் வருமான வரியை அறவிடுகின்றது.