Friday, September 19, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்நாயின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

நாயின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்காவில் நாய் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது ட்ரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி துப்பாக்கியை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நாய் பின் இருக்கையில் குதித்து துப்பாக்கியை மிதித்ததில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

உயிரிழந்தவர் 32 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நாய் இறந்தவரின் செல்லப் பிராணியா என்பது குறித்து கன்சாஸ் மாநில காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட்ட விபத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#TMZ

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles