Friday, September 19, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் 124 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் 124 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரான காலநிலை காரணமாக 124 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடும் குளிரான காலநிலை காரணமாக 70,000 பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை தாக்கும் மிக மோசமான குளிர் காலநிலை இதுவாகும் என பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மலைப்பகுதிகளுக்கு இராணுவ ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடும் பனிப்பொழிவு காரணமாக ஹெலிகொப்டர்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்காலிக பேரிடர் மேலாண்மை அமைச்சர் முல்லா முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

#BBC

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles