Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி விதிக்கப்படாவிட்டால் IMF உதவி கிடைக்காதாம்

வரி விதிக்கப்படாவிட்டால் IMF உதவி கிடைக்காதாம்

விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை நடத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் நாட்டில் சவாலான சூழல் நிலவுவதாக தெரிவித்த அமைச்சர், தேர்தல் வேட்பாளர்களுக்கு அதிக எரிபொருளை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles