Monday, July 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த போது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ் மா அதிபரினால் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஊழியர் ஒருவர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம் இரவு இடம்பெற்ற ஏதேனுமொரு சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக, உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles