Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்சினிமா பாணியில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது

சினிமா பாணியில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது

திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில் உள்ள வங்கியில் பட்டப் பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கி ஊழியர்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டதால் உள்ளே நுழைந்து பொதுமக்கள் சந்தேக நபரை பிடித்துள்ளனர்.

அவரை சரமாரியாக தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விசாரணையில் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், ‘துணிவு’ திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles