வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்று (23) பயணமானதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பிரகாரம் அவர் பயணமாகியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சவுதியில் தங்கியிருக்கும் போது, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் மக்கா மற்றும் மதீனா நகரங்களின் ஆளுநர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
வெளிவிவகார அமைச்சரின் சவுதி பயணம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடைகிறது.