Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மா விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம்

கோதுமை மா விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம்

இலங்கையில் கோதுமை மா கிலோவொன்று 400 ரூபா அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கோதுமை மா 250-265 ரூபா அளவில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பல இடங்களில் இன்னும் ஒரு கிலோ கோதுமை மா 300 ரூபா அளவிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை கிலோ 195 – 200 ரூபாவாக நிலவுகிறது.

ஆனால் எதிர்வரும் வாரங்களில் கோதுமை மாவின் மொத்த விற்பனையும் அதன்வழியே சில்லறை விலையும் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு நிலவுகின்ற தடையை தொடர்ந்தும் பேணுவதற்கு அந்த நாடு தீர்மானித்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles