Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஆசிரியர்கள், அதிபர்கள் கோரிக்கை

உயர்தரப் பரீட்சை கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஆசிரியர்கள், அதிபர்கள் கோரிக்கை

உயர்தர பரீட்சை தொடர்பான கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு போதாது எனக் கூறி, இலங்கை ஆசிரியர் சங்கம் (CTC) கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

‘கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சை தொடர்பான கடமைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என்று பல சந்தர்ப்பங்களில் கூறினார். ஆனால் இன்றுவரை அது அதிகரிக்கவில்லை. உயர்தரப் பரீட்சை நேற்று ஆரம்பமானதுடன் பரீட்சை நிலையங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

ஆசிரியர்களும் அதிபர்களும் ஒத்துழைப்புடன் பணிபுரிந்து பரீட்சையை நடத்துவதற்கு உதவுவார்கள் என நம்புகின்றனர். அதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கின்றோம்’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles