Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஜப்பான் - யுனிசெஃப்

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஜப்பான் – யுனிசெஃப்

இலங்கையில் குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு மற்றும் போஷாக்கு சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன்இ ஜப்பானிய அரசாங்கம் குளிர் சேமிப்பு மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்திற்காக யுனிசெஃப் உடன் இணைந்து சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்ட தடுப்பூசி கொள்கலன்களை ஒப்படைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் தடுப்பூசி கொள்கலன்கள், குளிர் பெட்டிகள் மற்றும் தெர்மோமீட்டர்களை விநியோகிக்கும் திட்டத்தில் இது மேலும் ஒரு படியாகும். இதற்காக 03 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இதன் கீழ், அதிக வெப்பநிலை உணர்திறன் தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் சேமித்து வைக்கும் வசதிகளுடன் கூடிய 13 குளிர் அறைகள் உள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக், இலங்கை சிறுவர்களின் குறுகிய கால மற்றும் நீண்டகால சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஜப்பானிய அரசாங்கம் மற்றும் யுனிசெப் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles