Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவர் ஒருவர் கைது

வெளிநாட்டவர் ஒருவர் கைது

செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 40 வயதான நைஜீரிய பிரஜை ஆவார்.

மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) மிரிஹான கங்கொடவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஒரு மடிக்கணினி ரக கணினியை பொலிஸார் கைப்பற்றினர்.

குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர் இன்று (23) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles