Tuesday, August 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்

லொறி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று (22) பிற்பகல் ஹட்டன் – கொட்டகலை யாடன் சைட் தோட்டத்திற்கு செல்லும் பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் பின்னால் பயணித்த இருவருக்கு காயம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் திக் ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles