அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய விகாரையின் மாணிக்க கற்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த வாரம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய சைத்தியராஜய அமைந்துள்ள அனுராதபுரம் பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த அறிக்கை இன்று (23) ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் ருவன்வெலிசாய சைத்திய ராஜயாவின் சிறிய நகைகள் திருடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தொல்பொருள் திணைக்களம், பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட 7 தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த வாரம் அநுராதபுரம் ருவன்வெலிசாய சைத்யராஜயவுக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்த போதும், எந்தவொரு தரப்பினரும் அங்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.