கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வெளியேரும் போது, தமது வாகனத்தை எடுக்க முடியாத வகையில், மற்றுமொரு வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். இது குறித்து அருகில் இருந்த காவலாளியிடம் அறிவித்துள்ளனர்.
மற்றைய வாகனத்தின் சாரதியிடம் வாகனத்தை அப்புறப்படுத்துமாறு பல தடவைகள் கூறிய போதும் வாகனத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட தம்பதிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
காலதாமதம் காரணமாக குறித்த தம்பதிக்கும், துணிக்கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் புகார்கள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.