அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (23) கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டதையடுத்து, கொழும்பு கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு, என்.எச்.எம். அப்துல் காதர் மாவத்தை என்பன முற்றாகத் தடைப்பட்டன.
‘திருடர்களைக் காக்கும் – வரி அறவிடும் ரணில் ராஜபக்ஷவை விரட்டியடிப்போம், ‘செய்யக்கூடிய ஒருவருக்குக் கொடுங்கள் பாவத்தை தேடாதீர்கள்’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.