நாட்டில் தீராத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்நிலையில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தினத்தினை நடத்துவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில் கறுப்பு நாடாக்களை கட்டி தனது எதிர்ப்பினையும், அனைத்து மக்களையும் இதற்காக ஒத்துழைக்குமாறும், சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் வரைக்கும் அங்குள்ள தூண்களில், கம்பிகளில் கறுப்புக் கொடியினை கட்டி எதிர்ப்பினை தெரிவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாகவும், பிள்ளைகளுக்கு சாப்பிட சாப்பாடு இல்லை என்றும் மக்கள் அவதியுறும் இந்நிலையில் அரசின் இந்த செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.