Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்கள் பலரை நட்டயீடு கொடுத்து பணி நீக்க திட்டம்

அரச ஊழியர்கள் பலரை நட்டயீடு கொடுத்து பணி நீக்க திட்டம்

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக பல நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் இயந்திரங்கள் நிறுவனத்தை ஒன்றிணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், அந்தந்த நிறுவனங்களில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் வைத்திருக்கவும், ஏனையோரை பணி நீக்கவும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படவுள்ளன.

இவ்வாறு அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதற்காக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles