மிஹிந்தலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பின்னால் புதைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடைக்கு சொந்தமான காணியின் உரிமையாளர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் வடமாகாண விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது SFG 87 ரகத்தைச் சேர்ந்த கைக்குண்டு என்பது தெளிவாகத் தெரியவில்லை.