Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாமிசம் உண்ணும் யானை

மாமிசம் உண்ணும் யானை

மின்னேரிய பிரதேசத்தில் மாமிசம் உண்ணும் யானையொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

மின்னேரிய பகுதியிலுள்ள கிராமங்களை தாக்கிய காட்டு யானையொன்று அப்பகுதியில் உள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன கட்டிடத்திற்குள் நுழைந்து மீன்களை உணவாக உட்கொள்ளும் வித்தியாசமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த காட்டு யானை நேற்று (19) காலை மின்னேரிய கடற்றொழில் கூட்டுத்தாபன கட்டடத்திற்குள் புகுந்துள்ளது.

கட்டடத்தின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குறித்த யானை உணவாக உட்கொண்டுள்ளது.

இந்த காட்டு யானை மின்னேரியா – ஹபரனை பிரதான வீதியின் இருபுறங்களிலும் உள்ள கடைகளுக்குள் புகுந்து சில உணவுப் பொருட்களையும் உண்பதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீண்டகாலமாக நிலவும் இப்பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles