தனது நண்பனை பேக்கரிக்குள் கொலை செய்து ஒரு வருட காலமாக தலைமறைவாகி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நுகேகொட பகுதியில் பேக்கரி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம், வெல்லம்பிட்டி – வென்னவத்த பிரதேசத்தில் பாழடைந்த கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொலொன்னாவ – மீதொட்டமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் வேலையற்று இருந்த நண்பனுக்கு தான் பணியாற்றிய பேக்கரியிலேயே வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகறாரில், கொலை செய்யப்பட்ட நபர் பேக்கரியின் உரிமையாளரிம் நண்பன் குறித்து புறம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சந்தேக நபர்,நண்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று பேக்கரியில் பதுங்கி இருந்த சந்தேக நபர், நண்பனை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வருடங்களின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.