ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருக்கிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணிலை இந்தியாவுக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பிதழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
