Friday, August 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுமதி அட்டை கிடைக்காதோர் பதிவிறக்கம் செய்துக் கொள்க - பரீட்சைகள் திணைக்களம்

அனுமதி அட்டை கிடைக்காதோர் பதிவிறக்கம் செய்துக் கொள்க – பரீட்சைகள் திணைக்களம்

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரவுத்தளத்திற்குள் பிரவேசித்து, பாடசாலை பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles