நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 12 பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.
விலை குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலை கீழே தரப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் 1 கிலோ – ரூ.180
வெள்ளை சீனி 1 கிலோ – ரூ.216
சிவப்பு அரிசி (கெக்குலு) 1கிலோ – ரூ.187
வெள்ளை கெக்குலு (உள்ளூர்) 1 கிலோ – ரூ. 179
சம்பா (உள்ளூர்) 1கிலோ – ரூ.210
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) 1கிலோ – ரூ.189
வெள்ளை நாட்டரிசி (இறக்குமதி) 1கிலோ – ரூ.180
கீரி சம்பா 1கிலோ – ரூ.239
சிவப்பு பருப்பு 1 கிலோ – ரூ.370
காய்ந்த மிளகாய் 1 கிலோ – ரூ.1730
கோதுமை மா 1 கிலோ – ரூ.235
நெத்தலி 1 கிலோ – ரூ.1100