நாடாளுமன்றத்தில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டபோது போராட்ட செயற்பாட்டாளர்களும் புனர்வாழ்வு என்ற போர்வையில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட முடியும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனினும், உயர் நீதிமன்றத்தில் சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்திய பின்னர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மாத்திரம் புனர்வாழ்விற்காக இந்த சட்டம் வரையறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.