Friday, April 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்முனைக்கான வேட்புமனுக்களை ஏற்பதற்கான தடை நீடிப்பு

கல்முனைக்கான வேட்புமனுக்களை ஏற்பதற்கான தடை நீடிப்பு

கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி இலங்கை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம், இரு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதைச் சேர்ந்த அஹமட் லெப்பை மொஹமட் சலீம் மற்றும் அஹமட் ரஹீம் மொஹமட் அஸீம் ஆகிய இருவர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் வசிக்கும் பகுதி சாய்ந்தமருது நகர சபைக்கு சொந்தமானது என்றாலும், கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கி அண்மைய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles