Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCPC, மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா கடன்பட்டுள்ளது

CPC, மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா கடன்பட்டுள்ளது

இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டிய 108 பில்லியன் ரூபாவை வழங்காவிடின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் தற்போது பெற்றுக்கொள்ளும் எரிபொருள் மற்றும் நெப்டாவிற்கான கட்டணத்தையேனும் செலுத்த முன்வர வேண்டும் என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் என மின்சார சபை அறிவித்துள்ளதன் பின்புலத்திலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு வழங்கிய கடனை கோரி நிற்கின்றது.

ஜனவரி 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இடைக்கால மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை கடந்த வாரம் அறிவித்திருந்தாலும் அந்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெறாமையினால், அமைச்சரவை அனுமதியை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் N.S.இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானித்துள்ள விலைத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவை செயலாளருக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய இடைக்கால விலைத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியான அனுமதி இல்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

கடந்த காலத்தை பாதிக்கும் வகையில், விலையை அதிகரிப்பது சட்டவிரோதமானது என அமைச்சரவையின் செயலாளருக்கு ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles