Wednesday, July 23, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகினார்

வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகினார்

வியட்நாம் ஜனாதிபதி நுயேன் சுவான் ஃபுக் (Nguyen Xuan Phuc) பதவி விலகியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வியட்நாமில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதில் பல அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பதவிநீக்கப்பட்ட அரசியல்வாதிகளில் நாட்டின் 2 துணைப்பிரதமர்களும் அடங்குவர்.

ஜனாதிபதி ஃபுக் பதவி நீக்கப்படவிருப்பதாகக் கடந்த சில நாள்களாக வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. இப்போது அவரே பதவி விலகியிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.  

வியட்நாம் ஜனாதிபதி திடீரெனப் பதவி விலகுவது வழக்கமானதல்ல. அங்கு நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் அரசியல் மாற்றங்கள் மிகவும் கவனமாக நடப்புக்குக் கொண்டுவரப்படும். 

2016ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த ஃபுக் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles