பாணந்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும்ம் ஏற்படவில்லை என்றும், சொத்து சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) பிற்பகல் பாணந்துறை ஜனப்ரிய வீதியில் பணத் தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், சம்பவத்தில் தாக்கப்பட்ட இருவர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த தாக்குதலின் அடிப்படையில் நேற்று இரவு 10.30 மணியளவில் மொதரவில அடுக்குமாடி குடியிருப்புக்கு இனந்தெரியாத குழுவொன்று வந்து மூன்றாவது மாடியில் உள்ள வீடொன்றுக்கு தீ வைத்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொரட்டுவ மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் வந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லா தலைமையில் பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.