சுவிட்ஸர்லாந்தின் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் ஜெர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் காலநிலை விவாதத்திற்கு ஒரு முக்கிய புள்ளியாக மாறிய,மேற்கு ஜெர்மனியின் நிலக்கரிச் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, நேற்று அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கார்ஸ்வீலர் நிலக்கரிச் சுரங்கத்தின் விரிவாக்கம் காரணமாக அருகிலுள்ள சிறிய கிராமமான லுட்செராத் இந்த எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று, சுரங்கத்தின் விளிம்பை நெருங்கிய பின்னர், காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட எதிர்ப்பாளர்கள் குழுவில் அவரும் ஒருவர் என்று ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், அவர் விரைவில் விடுவிக்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.