Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண் ஒருவரின் சடலம் இன்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் கொழும்பு பல்கலைக்கழக மாணவி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் விவரங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட நபர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று சம்பவ இடத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, குறித்த பெண் தனது காதலனால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles