மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.