Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇழப்பீடை செலுத்த நெருங்கியவர்களிடம் உதவி கோரியுள்ளேன் - மைத்ரிபால

இழப்பீடை செலுத்த நெருங்கியவர்களிடம் உதவி கோரியுள்ளேன் – மைத்ரிபால

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரியினால் தவறு நடந்தால் அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதால் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்க தன்னிடம் போதிய பணம் இல்லை என தெரிவித்த அவர், நாடு முழுவதிலும் உள்ள நண்பர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து உதவி கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles