உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில மாவட்டங்களில் தனித்து கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமத்திபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி வடமாகாணத்தின் 2 தேர்தல் மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் 3 தேர்தல் மாவட்டங்களிலும், ஏனைய 4 மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடும்.
ஏனைய மாவட்டங்கள் குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.