பகவந்தலாவ நகரில் உள்ள கடை ஒன்றின் பின்புறம் தற்காலிகமாக கட்டப்பட்ட கொட்டகையில் இருந்து மான் ஒன்று இன்று (16) மீட்கப்பட்டது.
பகவந்தலாவ தேயிலைத் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கும், அதற்காக பயிற்சி பெற்ற நாய்களையும் அப்பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பயன்படுத்துகின்றனர்.
வேட்டையாடும்போது தப்பி ஓடிய மானை கடை ஊழியர்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மான் காயமடைந்துள்ளதாக தொழிலாளர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.