யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை – உதயசூரியன் கடற்கரையில் இம்முறையும் தைப்பொங்கல் தினத்தில் பட்டப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா கமிட்டி மற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இணைந்து இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
இங்கு தமிழ் மற்றும் இந்து மக்களின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பல அழகிய பட்ட வடிவமைப்புகள் யாழ் வான் முழுவதும் காணக்கூடியதாக இருந்தது.
காத்தாடி விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் உதயசூரியன் கடற்கரையில் திரண்டதாகவும்இ ஏற்பாட்டாளர்கள் நடத்திய போட்டிகளுக்கு தங்கப் பரிசுகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வல்வை பட்டப்போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக பட்டக்கலைஞனான பிரஷாந் என்பவர் முதலிடத்தை பெற்று வந்துள்ளார்.
அவர் இம்முறையும் போட்டியில் முதலிடத்தை பெற்று தனது சாதனையை நிலை நாட்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.