பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை தரமிறங்கியுள்ளது.
அதன்படி, உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளில் இலங்கை தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அந்த சுட்டெண்ணின் படி, டிசம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ பணவீக்கம் 66மூ ஆக உள்ளது.
ஆனால் இலங்கையின் உண்மையான பணவீக்கம் 106% என ஸ்டீவ் ஹான்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக வெளியிடப்பட்ட சுட்டெண்ணில் இலங்கையின் பணவீக்கம் 101% ஆக பதிவாகியிருந்ததுடன், சமீபத்திய சுட்டெண்ணில் 106% அதிகரித்துள்ளது.
பணவீக்க சுட்டெண்ணில் சிம்பாப்வே முதலிடத்திலும், வெனிசுலா இரண்டாவது இடத்திலும், லெபனான் மூன்றாவது இடத்திலும், கியூபா நான்காவது இடத்திலும் உள்ளன.