நீர் கட்டணங்களை அறவிட புதிய முறைமையை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கட்டண பட்டியல் வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் அங்கேயே செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.
பரீட்சார்த்த திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.