Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

தனிப்பட்ட தகராறு காரணமாக இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.

கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடியாவல பிரதேசத்தில் நேற்று (15) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகள் இன்று (16) இடம்பெறவுள்ளன.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles