அரச நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத உத்தியோகத்தர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களுக்கு சம்பளம் வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திறைசேரியில் இருந்து பணம் விடுவிப்பதற்கு தேவையான தகவல்களை சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களின் பிரதம நிதி அதிகாரி, கணக்காளர், பணிப்பாளர் (நிதி) அதிகாரிகளுக்கு திறைசேரி செயற்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி செயல்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திறைசேரி பிரதிச் செயலாளரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.