Sunday, December 14, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 வயதுக்குட்பட்டோரின் மரதன் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த சிறுவன்

13 வயதுக்குட்பட்டோரின் மரதன் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த சிறுவன்

2 ஆம் தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர், நேற்று (12) நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மரதன் ஓட்டப் போட்டியில் 5 கிலோமீற்றர் தூரத்தை 27 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கெக்கிராவ கல்வி வலயத்திலுள்ள பல்லலுவ முஸ்லிம் கல்லூரியில் 2ம் தரத்தில் கல்வி கற்கும் எப்.எம்.ருஷ்டி என்ற மாணவன், மரதன் போட்டியில் 13 பேரை பின்தள்ளி இந்த சாதனையை புரிந்துள்ளார்.

போட்டியில் இணைந்துகொண்ட 13 வயதுக்குட்பட்ட 30 போட்டியாளர்களில் 17வது இடத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

பல்லலுவெவ – திக்கடியாவ – கலாவ போன்ற பிரதேசங்களின் ஊடாக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றதுடன், கல்கிரியாகம பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் அது நடைபெற்றது.

இந்த மாணவனின் தந்தை கிரிக்கெட் வீரர் என்பதுடன் போட்டியின் நாயகன் உட்பட பல விருதுகள், கோப்பைகள், பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், தன்னை விட வயது கூடியோருடன் போட்டியிட்டு 17 ஆவது இடத்தை பெற்ற குறித்த சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles