முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவரும் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சருமான ரெஜினோல்ட் குரே சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சந்திப்பின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுலுத்தறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.