Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை டெண்டர் இந்தியாவுக்கு - வர்த்தக அமைச்சர்

முட்டை டெண்டர் இந்தியாவுக்கு – வர்த்தக அமைச்சர்

இலங்கைக்கான முட்டை விநியோகத்திற்கான டெண்டர் இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், குறைந்த விலைக்கு வழங்கிய இரண்டு டெண்டர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (12) தெரிவித்தார்.

முட்டை இறக்குமதியில் உலகில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படாது எனவும் சுகாதாரத் துறையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் அறிக்கைகளும் அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை சுகாதாரத் திணைக்களம் கொடுக்காவிட்டால், இறக்குமதிக்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

நிதி, வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களிடமும் இதன் இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles