ஜனாதிபதி உட்பட அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதியல்லாத நன்மைகளுக்காக செலுத்த வேண்டிய வரிகளை உரிய முறையில் வசூலிக்கும் முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தின் நிதிக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரி அறவீடு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசாங்கத்தின் நிதிக் குழுவை கடந்த 10 ஆம் திகதி ஸ்ரீ அழைத்த போது இது வலியுறுத்தப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட பதவியை வகிக்கும் நபருக்குச் சொந்தமான வாகனங்கள், வீடுகள், பணியாளர்கள் போன்றவையும் நிதியல்லாத நன்மைகளில் உள்ளடங்கும்.
எனவே அவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த வரிகளை திருத்தம் செய்ய வேண்டும் என்று தலைவர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
2023 இல் எதிர்பார்க்கப்படும் வரி வருவாயின் மிகப்பெரிய தொகை பெருநிறுவன வருமான வரியிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகை 603 பில்லியன் ரூபா எனவும், பெறுமதி சேர் வரி (ஏயுவு) மூலம் 553 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்