முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
2022 இல் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது ஜனாதிபதியின் அறையில் இருந்து 17.5மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டு போராட்டக்காரர்களால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறுஇ நீதிமன்றம் பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டது.