மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவிற்கு கஞ்சா விநியோகித்த குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் சஞ்சய் தர்மதாச கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்று (12) இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மொனராகலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிக்கையின் பிரகாரம், அத்திமலை ஓஐசி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.