இலங்கை அரசாங்கம் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை அறிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் 200,788 இராணுவத்தினர் இருக்கின்ற நிலையில், 2024ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 130,000ஆக குறைக்கப்படவுள்ளது.
2030ம் ஆண்டாகும் போது இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 100,000ஆக குறைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கம் மற்றும் இராணுவ எண்ணிக்கை தொடர்பாக நீண்டகாலமாக தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.