Monday, July 28, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு400 கிலோ கோதுமை மாவை திருடிய ஒருவர் கைது

400 கிலோ கோதுமை மாவை திருடிய ஒருவர் கைது

வத்தளை – மாபோலயில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் 400 கிலோகிராம் கோதுமை மாவை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து வத்தளையை சேர்ந்த 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 1,12,000 ரூபா பெறுமதியான 50 கிலோகிராம் கோதுமை மா அடங்கிய 08 பொதிகளை திருடியுள்ளார்.

அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles