Wednesday, September 17, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் தேர்தல் நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும்

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் தேர்தல் நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும்

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்புமனுக்கள் ஏற்கும் பணி ஜனவரி 18ஆம் திகதி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

சம்பிரதாயங்கள் நிறைவடைந்தவுடன் தேர்தல் தின அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களை தேர்தலுக்கு அழைத்த போதிலும் கலைக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles